அமெரிக்க ஆதரவு இல்லாமல் உக்ரைன் வீழ்ச்சியடையும் அபாயம்: ஜப்பான் எச்சரிக்கை
அமெரிக்க ஆதரவு இல்லாமல் ரஷ்யாவின் தாக்குதலின் கீழ் உக்ரைன் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது, இது சீனாவை தைரியப்படுத்தும் மற்றும் கிழக்கு ஆசியாவில் ஒரு புதிய நெருக்கடியைத் தூண்டும் ஒரு பேரழிவு என்று ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி.க்கு அரசு விஜயத்தின் போது அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக அரங்கில் நாட்டின் பங்கு குறித்த “சுய சந்தேகத்தை” கடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.





