ரஷ்ய நிழல் கடற்படை கப்பல் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய உக்ரைன்!
மத்தியதரைக் கடலில் ரஷ்ய “நிழல் கடற்படை” எண்ணெய் டேங்கரான கென்டிலைத் தாக்க முதன் முறையாக வான்வழி ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.
SBU பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தினார்.
லிபியாவின் கடற்கரையிலிருந்து 2,000 கி.மீ.க்கு தொலைவில் இருந்த கப்பலை குறிவைத்தே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
மேற்கத்தேய நாடுகளின் தடைகளுக்கு மத்தியிலும் பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷ்யா பொருளாதாரத்தை நிலைநிறுத்தி வருகிறது.
இதன்மூலம் பெறப்படும் நிதி போரை தொடர்ந்து நடத்த உதவிப்புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கப்பல் போக்குவரத்தை முடக்க உக்ரைன் மேற்கொண்டுவரும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





