சொந்த நாட்டுக்குள்ளேயே தாக்குதல் நடத்திய உக்ரைன் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்!
கெர்சன் (Kherson) பிராந்தியத்தின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“கோர்லியில் (Khorly) கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட தகவல்களின்படி, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 20இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா (Maria Zakharova), உக்ரைன் பொதுமக்கள் மீது “பயங்கரவாத தாக்குதலை” நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





