ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் உள்ள எண்ணெய் முனையத்தை தாக்கிய உக்ரைன்
ரஷ்யா உடனான போரில் அந்த நாட்டின் கிரிமியா பகுதியில் உள்ள ராணுவத்துக்கு எரிபொருள் விநியோக்கும் முக்கியமான எண்ணைய் முனையத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் போர் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ரஷ்யா ஆக்ரமித்துள்ள கிரிமியா தீபகற்பத்தில் தெற் கடல் பகுதியான ஃபியோடோசியா நகரில் உள்ள ரஷ்ய ராணுவத்துக்கு எரிபொருள் விநியோகிக்கும் எண்ணைய் முனையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கும், ராணுவத்துக்கும் பெரிய அடி கிடைத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “போர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்கு பகுதியில் பெரிய அளவுக்கு ரஷ்ய படைகளை சிறைபிடிக்க உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக போரிட்டு வருகின்றனர்,” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஃபியோடோசியா நகரின் ரஷ்ய அதிகாரிகள், “எண்ணைய் முனையம் தீப்பற்றி எரிந்தது,” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.