லெபனானை விட்டு வெளியேறுமாறு குடிமக்களை வலியுறுத்தும் இங்கிலாந்து
லெபனானில் உள்ள தனது குடிமக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இஸ்ரேலிய எல்லையில் பதட்டங்கள் விரைவில் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
“அடிக்கடி பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன, பதட்டங்கள் அதிகமாக உள்ளன, மேலும் நிலைமை விரைவாக மோசமடையக்கூடும்” என்று வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி பாராளுமன்றத்தில் தெரிவித்துளளார்.
“எல்லா சூழ்நிலைகளுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த நான் வெளிநாட்டு அலுவலக தூதரக குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன், ஆனால் இந்த மோதல் தீவிரமடைந்தால், அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியும் என்று அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்க முடியாது. மக்கள் அந்த இடத்தில் தங்கும் நிலைக்கு தள்ளப்படலாம்” என்று டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.