பிரித்தானிய இளைஞர்களுக்கு புதிய இடைவெளி ஆண்டு திட்டம் அறிமுகம்
பாடசாலை மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்களுக்கு இராணுவம், ரோயல் கடற்படை மற்றும் ரோயல் விமானப்படை ஆகியவற்றின் அனுபவத்தை வழங்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் புதிய “இடைவெளி ஆண்டு” எனும் (Gap Year) திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தத் திட்டம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு, சம்பளத்துடன் கூடிய 12 மாத பயிற்சி பாடநெறியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகால இராணுவ சேவைக்கு கட்டாயம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் முதல் கட்டமாக 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதற்கான விண்ணப்பங்கள் 2026 வசந்த காலத்தில் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், ஆண்டுக்கு 1,000 இளைஞர்கள் வரை இணைத்துக்கொள்ள அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் சம்பள விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த திட்டம், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் (ADF) இடைவெளி ஆண்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





