பிரித்தானியாவில் அடுத்த வாரம் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் அபாயம்
பிரித்தானியாவில் அடுத்த வாரம் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனத் தோன்றும் இடங்களின் பட்டியலை வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
வெப்பமான வசந்த காலநிலை வருவதற்கு முன்பு இங்கிலாந்து ஒரு இறுதி குளிர்கால காலநிலைக்கு தயாராக உள்ளதென பிரித்தானிய வில்வானிலை சேவைகளின் மூத்த வானிலை ஆய்வாளர் ஜிம் டேல் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிக்கு இடையில் இந்த காலநிலையை மக்கள் சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிர் மற்றும் உறைபனியுடனான காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stoke, Leeds, Cardiff, Dublin மற்றும் Huddersfield as well as Harrogate, Skipton, Yorkshire Dales மற்றும் Darlington ஆகிய பகுதிகளே கடும் பாதிப்பிற்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் Durham, வடக்கு Pennines, Hexham மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.