பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியை மீண்டும் தொடங்கிய இங்கிலாந்து
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் ஏஜென்சியான UNRWA க்கு இங்கிலாந்து மீண்டும் நிதியுதவி அளிக்கும் என்று வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார்.
அதன் ஊழியர்களுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகளை மறுஆய்வு செய்ததை அடுத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, டேவிட் லாம்மி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 12 UNRWA ஊழியர்கள் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஜனவரியில் நன்கொடைகளை நிறுத்திய 16 மேற்கத்திய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.
இந்த தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா.வின் உள் விசாரணை நடந்து வருகிறது.
(Visited 5 times, 1 visits today)