பிரித்தானியாவில் 3,000 இந்தியர்களுக்கு விசாக்கள் – இன்று இறுதி நாள்
பிரித்தானியாவில் இந்திய நாட்டினருக்கு 3,000 விசாக்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இளம் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளது.
Ballot System எனப்படும் சீட்டிழுப்பில் இந்த விசாக்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் பங்கேற்க வேண்டும்.
இது ஒரு குலுக்கல் போல, விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். அதிலிருந்து 3000 பேரை பிரித்தானிய அரசு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விசா வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்திய பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை பிரித்தானியாவில் வசிக்க, வேலை செய்ய அல்லது படிக்க வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
முற்றிலும் இலவசமான இந்த திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் பெப்ரவரி 20 மதியம் 2:30 முதல் 22 இன்று பிற்பகல் 2:30 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
இது தொடர்பான விவரங்களை இந்தியாவில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ கணக்கின் மூலம் பகிர்ந்துள்ளது.
அத்தோடு, குறித்த பதிவில் பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை தேட ஆர்வமுள்ள இந்திய பட்டதாரிகள் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.