பொம்மை அல்ல சடலம்! கென்ட் விபத்தில் தபால்காரர் கண்ட அதிர்ச்சி.
Representative Image
இங்கிலாந்தின் கில்லிங்ஹாம் (Gillingham) பகுதியில் உள்ள A289 கேட்ஸ் ஹில் (Gads Hill) சாலையில் கடந்த திங்கள்கிழமை ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் முதியவர் ஒருவர் பலியான விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை அன்று ஒரு சாம்பல் நிற மெர்சிடிஸ் (Mercedes estate) கார் முதியவர் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த முதியவர் காரின் மேற்கூரையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். ஆனால், காரை ஓட்டி வந்தவர்கள் வண்டியை நிறுத்தாமல், மேற்கூரையில் முதியவர் இருப்பதை அறிந்தே நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
அந்த நேரம் கிரேஞ்ச் ரோடு (Grange Road) பகுதியில் தபால்களை விநியோகம் செய்துகொண்டிருந்த தபால்காரர் ஒருவர், சாலையில் ஒரு உடல் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த ரால்ப் பெல்மாண்டே (Ralph Belmonte) என்பவர் இது குறித்து கூறுகையில்
“முதலில் அந்தத் தபால்காரர், ஓடும் காரின் மேற்கூரையில் ஏதோ ஒரு பொம்மை (Dummy) கட்டப்பட்டிருப்பதாக நினைத்துள்ளார். ஆனால், தபால்களைப் போட்டுவிட்டுத் திரும்பி வரும்போது அதே உடல் சாலையில் கிடப்பதைக் கண்டுள்ளார். யாராவது விபத்துக்குள்ளாகி விடக்கூடாது என்பதற்காக அந்தப் பொம்மையை அகற்ற அவர் அருகில் சென்று பார்த்தபோதுதான், அது பொம்மை அல்ல, ஒரு மனிதனின் சடலம் என்பதை அறிந்து உறைந்து போயுள்ளார்.”
விபத்தை ஏற்படுத்திய மெர்சிடிஸ் கார் பின்னர் ஈஸ்ட்கோட் லேன் (Eastcourt Lane) பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. காரில் இருந்த இருவர் அங்கிருந்து கால்நடையாகத் தப்பியோடியுள்ளனர்.
காவல்துறையினர் இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்து 3 பேரைக் கைது செய்துள்ளனர்:
அதில் ஒருவர் சதம் (Chatham) எனும் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர்.
மற்றுமொறுவர் நிலையான முகவரி இல்லாத 28 வயது நபர்.
மேலும் வடமேற்கு லண்டன் (Edgware) பகுதியைச் சேர்ந்த மற்றொரு 28 வயது நபர் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்களின் கருத்து தெரிவிக்கையில் சுமார் 47 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வரும் ரால்ப் பெல்மாண்டே, “இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நடக்காத பாதுகாப்பான பகுதி இது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதுதான் எங்குமே பாதுகாப்பு இல்லை என்பது புரிகிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.





