போலி மின்னஞ்சல்கள் குறித்து பிரித்தானியா – அவுஸ்திரேலியா சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை
ஹேக்கிங் மோசடி முயற்சிகள் குறித்து பிரித்தானியா – அவுஸ்திரேலியா சைபர் நிபுணர்களால் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகள் செயலிழப்புடன் தொடர்புடைய சூழ்நிலையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஹேக்கிங் மோசடி குறித்து அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள இணையத் தள சைபர்-பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் முகவர் நிறுவனங்களே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இணையங்கள் செயலிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.எவ்வாறாயினும் தீங்கிழைக்கும் நடவடிக்கையால் இது ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இருப்பினும் சில மோசடியாளர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வமாக செயல்படுவதாக கூறிக்கொள்ளும் இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு
பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள இணைய தள சைபர் முகவர் நிறுவனங்கள் பொது மக்களை எச்சரித்துள்ளன.