சோமாலியாவில் விபத்துக்குள்ளான உகாண்டா ராணுவ ஹெலிகாப்டர் – 5 பேர் மரணம்

சோமாலியாவில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உகாண்டா இராணுவ ஹெலிகாப்டர் மொகடிஷு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் ஐந்து பயணிகள் கொல்லப்பட்டதாக உகாண்டா இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டரில் இருந்த எட்டு பேரில் மேலும் மூன்று பேர் பலத்த காயங்கள் மற்றும் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்ததாக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் குலாய்கியே தெரிவித்தார்.
விபத்தின் தாக்கத்தால் விமானத்தில் இருந்த வெடிமருந்துகள் வெடித்து, அருகிலுள்ள கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு, மூன்று பொதுமக்கள் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)