ஆசியா

தைவானை தாக்கிய ரகாசா புயல்: ஏரி உடைப்பில் சிக்கி 14 பேர் பலி,124 பேர் மாயம்

தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயுள்ளனர்.

ரகாசா தீவிரப் புயல் பலத்த மழையுடன் தைவானை தாக்கிய நிலையில், நேற்று கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஒரு பழமையான ஏரி உடைந்து, ஒரு பாலத்தை அடித்துச் சென்றது. இதனால் அடர்த்தியான சேறு மற்றும் சகதியுடனான தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள வீடுகளின் முதல் தளம் வரை சேறும், சகதியும் சூழ்ந்தது.

இதுகுறித்து பேசிய ஹுவாலியன் கவுண்டி அரசாங்க செய்தித் தொடர்பாளர் லீ குவான்-டிங், “ஏரி உடைப்பால் ஏற்பட்ட பாதிப்பில் 14 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த சம்பவத்தால் 124 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ‘ரகாசா’ அதி தீவிரப் புயல் காரணமாக தைவான் முழுவதிலும் இருந்து 7,600க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

ஏரி வெடிப்பு குறித்து பேசிய உள்ளூர் வாசிகள், “ஏரியில் ஏற்பட்ட உடைப்பு எரிமலை வெடிப்பது போல் இருந்தது. வெள்ளம் எங்கள் வீட்டின் முதல் தளத்திற்குள் நேராக பாய்ந்தது. ஏரி உடைந்த சில நிமிடங்களில், முதல் மாடியில் பாதியளவு தண்ணீர் உயர்ந்துவிட்டது” எனத் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்