இலங்கை

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு பெண்கள்!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் நேற்றுமாலை காருடன் , மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பெண்கள பரிதபமாக உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்கள் மானிப்பாய் ரஞ்சித் மோட்டோர்ஸ் ஊழியர்களே உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (26), மானிப்பாயை சேர்ந்த கீதரட்ணம் திவ்யா (31) ஆகியோரே உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம், ஊர்கவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அண்மையாக உள்ள வளைவில் நேற்று மாலை 4 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

ஊர்காவற்றுறையிலிருந்து வந்த கார், வீதியின் மத்திய வெள்ளைக் கோட்டை கடந்து எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிகள் இருவரும் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் தடம்புரண்டதில், காரில் பயணித்த வடமராட்சி, பருத்தித்துறையை சேர்ந்த சிவசுப்ரமணியம் சுதாகரன், கருணாமூர்த்தி விமலாதேவி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!