ரஷ்யாவில் உள்ள வில்யுச்சின்ஸ்கி எரிமலையிலிருந்து விழுந்து இரு சுற்றுலாப் பயணிகள் பலி

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள வில்யுச்சின்ஸ்கி எரிமலையில் மலை ஏறும் போது தவறிவிழுந்து இரு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக பிராந்திய அதிகாரிகள் சனிக்கிழமை(04/10) தெரிவித்தனர்.
யெலிசோவோ நகருக்கு அருகில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.அவர்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள், மலை நிபுணர்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகிய 45 பேர் கொண்ட குழு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 23 பேர் கொண்ட தரைப்படைக் குழு தரையிலிருந்து சுமார் 1,500 மீட்டர் (4,920 அடி) உயரத்தில் மலை ஏறுபவர்களைக் கண்டுபிடித்தனர்.
இதில் ஒரு ஆண்(60 வயது) சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், அவருடன் விழுந்த பெண் (27 வயது) காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மூன்றாவது நபர்(பெண் 40 வயது) எவ்வித காயங்களும் இன்றி மீட்கப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் அவசரகால நிகழ்வுக்கான அமைச்சிடம் (Ministry of Emergency Situations) மலை ஏறுவதற்கான முன்பதிவு ஏதுவும் செய்யவில்லை என்று இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.