யாழில் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கைப்பற்றினர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 38 times, 1 visits today)