ஆந்திர மாநிலதில் சிறை அதிகாரியை சுத்தியலால் தாக்கிவிட்டு இரு கைதிகள் தப்பியோட்டம்

ஆந்திர மாநிலத்தில் சிறை அதிகாரியை சுத்தியலால் தாக்கிவிட்டு இரு கைதிகள் தப்பியோடி உள்ளனர். ஆந்திர மாநிலம், அனக்கப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறையில் பணிபுரியும் வீரராஜு வெள்ளிக்கிழமை மாலை (செப்டம்பர் 5) சிறை நுழைவு வாயில் அறையில் இருந்தார்.
அப்போது, ஓய்வூதிய பண மோசடி வழக்கில் தொடர்புடைய ரவிக்குமார், திருட்டு வழக்கில் கைதான பெஜவாடா ராமு இருவரும் சேர்ந்து சுத்தியலால் வீரராஜு தலையில் சரமாரியாகத் தாக்கினார்கள்.
கடுமையாகத் தாக்கப்பட்ட வீரராஜு மயங்கி விழுந்துள்ளார். அவரது பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்த கைதிகள் இருவரும் முன்பக்கக் கதவை திறந்து தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை, தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனர். கைதிகள் வீரராஜுவை தாக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.