இலங்கை

ஹொரவ்பொத்தானையில் துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

ஹொரவ்பொத்தான -வாஹல்கட பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை-மாவட்டத்தில் ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் எல்லையை தாண்டி T-56 துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தான -01ம் கட்டை பகுதியைச் சேர்ந்த யோதகே சுனில்சாந்த (58) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சென்று வேட்டையாடிய போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாஹல்கட பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்