மாலபேயில் நச்சு இரசாயன புகையை சுவாசித்த இருவர் உயிரிழப்பு
மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நச்சு புகையை சுவாசித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொனராகலை மற்றும் கஹந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 45 மற்றும் 63 வயதுடையவர்கள், அவர்கள் கலக்க முயன்ற சில இரசாயனங்கள் நச்சு புகையை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நச்சுப் புகையால் பாதிக்கப்பட்ட இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





