இலங்கை செய்தி

காலி சிறைச்சாலையில் இருந்து மேலும் இரு கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் இரு கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 கைதிகள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஐந்து கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அனுமதிக்கப்பட்ட கைதிகளின் மாதிரிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக, காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்ததுடன், அதன் பின்னர் பல கைதிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இதேவேளை, காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாத்தறை சிறைச்சாலை கைதிகள் அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை