இலங்கை செய்தி

சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவு: நாளை நாடு தழுவிய ரீதியில் 2 நிமிட மௌன அஞ்சலி

நாட்டின் வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

35,000-இற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரழிவையும், அதன் பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் பிரதான நினைவு நிகழ்வு காலி, பெரலிய சுனாமி நினைவிடத்திற்கு அருகில் நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதேபோல், உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில், நாளை முற்பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிட்வா சூறாவளி காரணமாக நிலவும் தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு, இம்முறை மாவட்ட ரீதியில் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கவும் அனர்த்த மேலாண்மை மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!