பிரித்தானிய வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் முயற்சி முறியடிப்பு: ஐஎஸ் ஆதரவாளர்கள் இருவர் குற்றவாளிகள்
பிரித்தானியாவில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கத் திட்டமிட்ட இரண்டு ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தை இலக்கு வைத்து, தானியங்கி துப்பாக்கிகளால் பாரிய தாக்குதலை நடத்த 38 வயதான வாலித் சதௌய் மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் ஆகியோர் சதி செய்துள்ளனர்.
பிரித்தானிய வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்றாக அமையவிருந்த இந்தத் தாக்குதல் முயற்சி, பொலிஸாரின் புலனாய்வு விசாரணையால் முறியடிக்கப்பட்டது.
மீண்டும் நாட்டில் தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெறுவதை இது காட்டுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சதித்திட்டம் தொடர்பாகத் தெரிந்திருந்தும் அதிகாரிகளிடம் மறைத்த வாலித்தின் சகோதரரும் இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.





