உத்தரபிரதேசத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம்
உத்தரபிரதேசத்தின்((Uttar Pradesh) பரேலி-பிலிபிட்(Bareilly-Pilipit) நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஹபீஸ்கஞ்ச்(Hafizganj) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சித்ரா(Chitra) கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நவாப்கஞ்ச்(Nawabganj) பக்கத்திலிருந்து வந்த லாரி, அவர்களின் பைக் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது பிரேம்பால்(Prempal) மற்றும் 17 வயது சுனில் குமார்(Sunil Kumar) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த 18 வயது கோபால் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
மேலும், விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி பிரவீன் சோலங்கி(Praveen Solanki) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.





