செய்தி விளையாட்டு

காயம் காரணமாக இலங்கை அணியின் இரு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் விலகல்

இலங்கை சென்று இருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்றுள்ளது.

இதைதொடர்ந்து, இலங்கையில் உள்ள ஆர்பிஎஸ்சி மைதானத்தில் நாளை இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர்.

இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியின்போது மதுஷங்காவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

3வது டி20 போட்டியில் கேட்ச் பிடிக்க டைவிங் செய்யும்போது பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.

இதனால், செவ்வாயன்று பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பதிரனா பந்துவீசவில்லை.

மேலும், காயம் அடைந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!