ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி இரண்டு இத்தாலியர்கள் பலி
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தின் எல்லைக்கு அருகில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்ட பின்னர் இரண்டு இத்தாலிய மலையேறுபவர்களின் உடல்களை மலை மீட்பு குழுக்கள் கண்டுபிடித்தனர்.
இத்தாலியின் பீட்மாண்ட் பகுதியில் உள்ள வால் ஃபார்மாஸா பகுதியில் சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் பனிச்சரிவுக்குப் பிறகு ஒரு உடல் பனியில் புதைந்த நிலையில் காணப்பட்டது, மற்றொன்று ஏரியிலிருந்து மீட்கப்பட்டது என்று ஆல்பைன் மீட்புக் குழு CNSAS ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் பலத்த காற்று வீசிய போதிலும் ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் உடல்களைக் கண்டுபிடிக்க உதவியது.
30 வயதுடைய பெண் மற்றும் 53 வயதுடைய ஆண் ஒருவரும் பலியாகியுள்ளனர் என இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்கள் வடக்கு இத்தாலியின் லோம்பார்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்.