அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட்டம்
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் இன்று பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதாரங்களின்படி, இருவரும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை கேண்டீனில் வேலை செய்து வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஷ்ரவஸ்திபுர மற்றும் மற்றையவர் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
எனினும், அவர்கள் உடைகளை மாற்றிக்கொண்டு சிறை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சிறையிலிருந்து தப்பிச் சென்ற இருவரையும் கண்டுபிடிப்பதற்காக அனுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





