குஜராத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இருவர் மரணம் – 20 பேர் காயம்
குஜராத்தின் பருச்(Bharuch) மாவட்டத்தில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்ததுள்ளனர்.
“வெடிப்பின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் தொழிற்சாலை கட்டமைப்பு இடிந்து விழுந்தது. பெரும்பாலான தொழிலாளர்கள் தப்பிக்க முடிந்தது, அவர்களில் இருவர் சிக்கி இறந்தனர். தீ அணைக்கப்பட்ட பிறகு அவர்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன” என்று பருச் மாவட்ட ஆட்சியர் கவுரங் மக்வானா(Gaurang Makwana) குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வெடிப்பிற்கான காரணத்தை கண்டறிய தீயணைப்பு படை, காவல்துறை மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுக்கள் சம்பவ இடத்தை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சாய்கா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.




