உக்ரேனுடன் இரண்டு நாள் போர் நிறுத்தம்; தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் கிரெம்ளின்

மே 8 முதல் 10ஆம் திகதி வரை உக்ரேனுடனான போரை நிறுத்த ரஷ்யா இன்னமும் திட்டமிட்டு வருகிறது. ஆனால், உக்ரேன் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என்று கிரெம்ளின் எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவுக்கு ஏற்ப இடம்பெறுகிறது.
கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி இரண்டாவது உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்ற 80வது ஆண்டைக் குறிக்கும் வகையில் அதிபர் புட்டின் மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மே 8 முதல் 10 வரை மூன்று நாள் போர் நிறுத்தம் இடம்பெறும் என்று கிரெம்ளின் கூறியது.
போர்நிறுத்த நாள்களில் சீன அதிபர் ஸி ஜின்பிங் உட்பட மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் உலகத் தலைவர்களை புட்டின் சந்திக்கிறார்.ஆனால், உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி இதுவரை ரஷ்யாவின் போர்நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. குறைந்தது 30 நாள்கள் நீடிக்கும் போர் நிறுத்தத்தில் மட்டும் கையெழுத்திட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புட்டின் நீண்ட நாள் போர் நிறுத்தத்திற்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதாகக் கூறி வருகிறார்.