கிறிஸ்துமஸ் காலத்தில் அர்மாக் தேவாலயங்களில் கொள்ளை
கிறிஸ்துமஸ் நாளில், வடக்கு அயர்லாந்தின் கவுண்டி அர்மாக்(Armagh), நியூடவுன்ஹாமில்டனில் உள்ள இரண்டு தேவாலயங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 25 அன்று அதிகாலை 3 மணி முதல் டிசம்பர் 26 வரை டண்டல்க் (Dundalk)தெரு மற்றும் காசில்பிளேனி (Castleblayney)தெருவில் உள்ள தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் மின்னணு ஸ்பீக்கர்கள் மற்றும் சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தகவல் அறிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





