இங்கிலாந்தில் புதிய mpox தொற்றின் இரண்டு வழக்குகள் பதிவு!

இங்கிலாந்தில் புதிய mpox தொற்றின் இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம், UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி லண்டனில் mpox தொற்றின் மாறுபாட்டான Clade 1b தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை இனங்கண்டது. தற்போது இரு புதிய வழக்குகளை இனங்கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சமீபத்திய இரண்டு நோயாளிகள் தற்போது லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயின்ட் தாமஸ் NHS அறக்கட்டளையில் சிறப்பு கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த தொற்றால் பிரித்தானிய மக்களுக்கான ஆபத்து மிகவும் குறைவாக இருப்பதாக ஏஜென்சி குறிப்பிட்டுள்ளது.
மூன்று வழக்குகளின் தொடர்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப சோதனை மற்றும் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
(Visited 14 times, 1 visits today)