அமெரிக்காவின் உட்டாவில் வெடிகுண்டு குற்றச்சாட்டில் இருவர் கைது

உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் ஒரு செய்தி ஊடக வாகனத்தின் கீழ் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இரண்டு பேரை கைது செய்துள்ளது.
58 வயது அதீப் நசீர் மற்றும் 31 வயது அடில் ஜஸ்டிஸ் அஹ்மே நசீர் ஆகியோர் வாகனத்தில் வெடிகுண்டை வைத்ததாகக் கூறப்படுகிறது.
உட்டாவில் பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பழமைவாத அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த இருவர் மாக்னாவில் உள்ள அவர்களின் வீட்டில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல், பயங்கரவாத அச்சுறுத்தல், ஆயுத பாகங்கள் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)