செய்தி தமிழ்நாடு

இரண்டு லட்சம் ரூபாய் திருட்டு இருவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் சுயம்புலிங்கம் என்பவர் குளிர்பான மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.

கடந்த 27ம் தேதி அன்று மதியம் 3 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் குளிர்பானம் வாங்குவதற்காக வந்துள்ளனர்,

அப்பொழுது கடைக்காரரிடம் குளிர்பானம் கேட்டுள்ளனர்,அதற்கு முன்னர் மற்றொரு நபர் கேட்ட குளிர்பானத்தை எடுத்து அவரின் வண்டியில் வைப்பதற்காக சென்று உள்ளார்,

அந்த நேரத்தை பயன்படுத்தி குளிர்பானம் வாங்க வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவன் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்தை லாவகமாக எடுத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் அங்கு இருந்து சென்றுள்ளார்,

அதேபோல அருகில் உள்ள மற்றொரு ஹார்டுவேர்ஸ் கடையில் அதே தொப்பி அணிந்த மர்ம நபர் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்,

இரு சம்வங்கள் குறித்தும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து கடைகளில் வைக்கபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரனை மேற்கொண்டதில் திருட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த பிராட்வே பகுதியை சேர்ந்த சாயின்ஷா(30),

பெரம்பூர் பகுதியை சேர்ந்த அல்தாப் உசேன் (31) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி