இலங்கையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இரு மயக்க மருந்துகள்!
இலங்கையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
அவற்றுக்குப் பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
புதிய மயக்க மருந்து இன்று நாட்டுக்கு வருமெனவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் சில வகையான மயக்க மருந்தைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்கள் சிலர், உயிரிழந்தனர். இதையடுத்து, மயக்க மருந்து தொடர்பில் சுகாதார தரப்பினர் தமது கவனத்தை செலுத்தியிருந்தனர்.
(Visited 11 times, 1 visits today)





