பீகாரில் ரீல்ஸ் மோகத்தால் இரு 10ம் வகுப்பு மாணவர்கள் உயிரிழப்பு

பீகாரில் 10ம் வகுப்பு மாணவர்கள் மூவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த வாகனம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியதில் இருவர் உடனடியாக உயிரிழந்தனர், மூன்றாவது நபர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
சமுக ஊடகத்தில் பதிவிடுவதற்காக காணொளி (ரீல்ஸ்) எடுக்கப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மாநில தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 170 கி.மீ தொலைவில் உள்ள முங்கரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 80 அருகே உள்ள பரியார்பூர் சுல்தான்கஞ்சில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சுபம் மற்றும் ஆனந்த் குமார் உயிரிழந்தனர்.
காயமடைந்த சிறுவன் சோனு குமார் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூன்று நண்பர்களும் தேசிய நெடுஞ்சாலை 80 இல் ரீல்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டு சுல்தான்கஞ்சிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரீல் செய்யும் போது, பைக்கில் சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது வாகனம் நேருக்கு நேர் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.