தென்கொரியாவில் நடு கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகு : 04 பேர் பலி, 06 பேர் மாயம்!

தென் கொரியாவின் தெற்கு கடற்கரையில் மீனவர்களின் இழுவை படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 பணியாளர்களுடன் கூடிய படகு சீரற்ற வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
டகில் எட்டு தென் கொரியர்கள், மூன்று வியட்நாமியர்கள் மற்றும் மூன்று இந்தோனேசியர்கள் இருந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 8 times, 1 visits today)