உக்ரைனின் முக்கிய நகருக்குள் நுழைய தயாராகும் ரஷ்ய இராணும் – ஜெலன்ஸ்கி வழங்கிய வாக்குறுதி
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் நுழைய ரஷ்ய ராணுவம் முயற்சித்து வருவதாக தகவலட வௌழயாகியுள்ளது.
இந்த நிலையில் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திவரும் தரைவழித் தாக்குதலை முறியடிக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
அந்நகரைக் காக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் நகருக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவம், அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கார்கிவ் நகருக்குள் நுழையும் ரஷ்ய ராணுவத்தின் முயற்சியை முறியடிக்க, அந் நகரைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர் தாக்குதலை நடத்தி ரஷ்யத் துருப்புகளை விரட்டியடிப்போம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.





