கட்டாரில் ஹமாஸ் இலக்குகள் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

கட்டாரில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
ஏவுகணைகள் ஏவப்பட்ட பிறகு தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்க தனக்கு வாய்ப்பு இல்லை என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
கட்டார் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்திருந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாக ஒரு ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
கட்டாரின் தோஹாவில் சமீபத்தில் நடந்த தாக்குதல், உயர் பதவியில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
எனினும் இஸ்ரேலும் கத்தாரும் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி மிகுந்த அசௌகரியத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, கத்தார் மீது இஸ்ரேல் இனி தாக்குதல் நடத்தாது என்றும் அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.