ட்ரம்பின் நடவடிக்கை – எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நீண்டகாலம் வசித்த மக்களும் நாடு கடத்தப்படும் அபாயம்!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அயர்லாந்து குடிமக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இவ்வருடத்தின் (2025) ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில், 99 அயர்லாந்து குடிமக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் வெளிநாட்டு பிரஜைகள் வசிப்பது, அங்கு பணிப்புரிவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் ஏராளமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். இதன் பின்னணியில் இந்த தகவல் வந்துள்ளது.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் பலர் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லாமல், அமெரிக்காவில் நீண்டகாலம் தங்கியிருந்தவர்களாகும்.
நாடு கடத்தப்பட்ட பலர் அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்தவர்கள் எனவும், விசா காலாவதியான நிலையில் அவர்கள் தங்கியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





