அமெரிக்காவில் 1929ஆம் ஆண்டு நெருக்கடி மீண்டும் ஏற்படும் அபாயம்! டிரம்ப் எச்சரிக்கை

தமது வரி விதிப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதிப்பதால், 1929ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எச்சரித்துள்ளார்.
டிரம்ப் அரசாங்கம், பல்வேறு நாடுகளுக்கு எதிராக வரி விதிப்புகளை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த சூழலில், வரிவிதிப்பை ஆதரித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நமது வரி விதிப்புகள் பங்குச் சந்தையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.
தினமும் புதிய சாதனைகள் நடைபெறவிருக்கின்றன. கோடிக்கணக்கான டொலர்கள் நமது தேசிய கருவூலத்தில் சேரவிருக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)