உடன்பாட்டை ஏற்காவிட்டால் 70 சதவீதம் வரை வரிவிதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வர்த்தக உடன்பாட்டை ஏற்காவிட்டால் ஒகஸ்ட் முதல் திகதியில் இருந்து, 70 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று 12 நாடுகளுக்கு டிரம்ப் கடிதங்களை கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.
இதில் இந்தியாவும் இடம் பெற்றதா என்பது குறித்து தகவல் இல்லை.
இதுவரை பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மட்டும் அமெரிக்கா உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்தியாவுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)