பிபிசிக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப் – ஆவணப்படம் விவகாரத்தில் சட்ட நடவடிக்கை
பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிபிசியின் பனோரமா ஆவணப்படத்தில் தனது உரை திரித்துப் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமர்சனத்தை எதிர்கொண்டு, பிபிசி பொது இயக்குநர் டிம் டேவி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டெபோரா டர்னஸ் (Deborah Turness) ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்தனர்.
கேள்விக்குரிய ஆவணப்படத்தை முழுமையாகவும் நியாயமாகவும் திரும்பப் பெறுவதற்கு ஜனாதிபதி ட்ரம்பின் சட்டக் குழு பிபிசிக்கு இந்த மாதம் 14 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளது.
திரும்பப் பெறாத நிலை ஏற்பட்டால், ஒரு பில்லியன் டொலருக்கு வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 4 visits today)





