பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநரை பதவியில் இருந்து நீக்கிய டிரம்ப் மீது வழக்கு

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநரை பதவியில் இருந்து நீக்கியதற்காக ஜனாதிபதி டிரம்ப் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநராக செயற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி லிசா குக் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அண்மையில் பதவி நீக்கம் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், மிச்சிகனில் உள்ள ஒரு இடத்தை வசிப்பிடமாக குறிப்பிட்டு ஆவணத்தில் கையெழுத்திட்ட லிசா குக், இரண்டு வாரங்களுக்கு பிறகு ஜார்ஜியாவில் உள்ள ஒரு இடத்தை வசிப்பிடமாக குறிப்பிட்டு மற்றொரு ஆவணத்தில் கையெழுத்திட்டதாகவும் கூறினார்.
பெடரல் ரிசர்வ் வங்கி கொள்கைகளை மேற்பார்வையிடும் உறுப்பினர்களின் நேர்மை மீது அமெரிக்க மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஆனால் லிசா குக் நேர்மை மீது மக்களுக்கும், தனக்கும் நம்பிக்கை இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
(Visited 1 times, 1 visits today)