வட அமெரிக்கா

எதிர்பார்ப்பை திடீரென மாற்றிய டிரம்ப்

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை.

அமைதியை நிலைநாட்ட ஈரான் விரும்புகிறது. அந்நாடு மட்டுமல்ல, இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை கடும் அதிருப்தி அளிக்கிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் அனைத்தும் உடனடியாக தங்களது விமான தளங்களுக்கு திரும்ப வேண்டும். ஈரான் மீது எந்த தாக்குதலும் நடத்தக் கூடாது. ஈரான் மக்களில் யாரும் பாதிக்கப்படக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், “ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதாக இருக்காது. ஆனால், தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவை வெளியிட்ட ஓரிரு தினங்களிலேயே ட்ரம்ப் இப்படி மாற்றி பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்