அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கை – பறிக்கப்படவுள்ள முக்கிய பதவி

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹசெட் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கித் தலைவர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
விலைவாசி இறங்கி வருவதாகவும் அதைப் புரிந்துகொண்டு மத்திய வங்கியின் தலைவர் வட்டி விகிதத்தைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட்டியைக் குறைக்காவிட்டால் மத்திய வங்கித் தலைவர் பவலை நீக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்தார்.
(Visited 2 times, 1 visits today)