அமெரிக்காவில் உணவு திட்டத்திற்கு நிதியளிப்பதை நிறுத்திய ட்ரம்ப் – உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!
உணவு முத்திரைகள் என்றும் அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் ( Snap) திட்டத்திற்கு நிதியளிப்பதை இடைநிறுத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மில்லியன் கணக்கான குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்கள் நலன் பெறும் குறித்த திட்டத்திற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கீழ் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.
குறித்த தீர்ப்பை எதிர்த்து வெள்ளை மாளிகை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தது. இந்நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்போது நடத்தி வரும் பணிநிறுத்தத்தால் இந்தத் திட்டம் இழுபறியில் உள்ளது, ட்ரம்ப் நிர்வாகம் அதற்கு ஓரளவு நிதியளிக்க மட்டுமே முடியும் என்று வாதிடுகிறது.
இதன்படி குறித்த திட்டத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் வரை நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
Snap திட்டத்தை ஏறக்குறைய 42 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் இதற்காக 9 பில்லியன் டொலர் வரை செலவிடப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் பணிநிறுத்த நடவடிக்கைகளால் மக்கள் பலர் உணவின்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




