பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – பிரான்ஸ் ஜனாதிபதியை சீண்டும் டிரம்ப்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரஞ்சு ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனின் நிலைப்பாட்டிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில், மக்ரோன், பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் தனது கருத்தைத் தெரிவிக்கையில்,
“மக்ரோன் நல்ல மனிதர். எனக்கு பிடிக்கும். ஆனால் அவரது அறிக்கை பாரதூரமானது இல்லை. அதனை கணக்கில் கொள்ளத்தேவையில்லை” என டிரம்ப் தெரிவித்தார்.
மக்ரோனை தொடக்கம் முதலிலிருந்தே டிரம்ப் புறக்கணிக்கும், கிண்டல் செய்யும் அணுகுமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் மக்ரோனின் மனைவி பிரிஜித் மக்ரோனை பற்றிய அவமதிப்பான கூற்றுகளும், டிரம்ப் பரப்பியிருந்த சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன.