செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்கு தடை: கையெழுத்திட்ட டிரம்ப்

அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்கும் உத்தரவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

திருநங்கை, நம்பிகள், அமெரிக்கப் படைகளில் சேர்வது குறித்த பென்டகனின் கொள்கையை திருத்துமாறு, பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத்தை வலியுறுத்துவதற்கான உத்தரவாக அது அமைந்துள்ளது.

இதன் மூலம், அமெரிக்க இராணுவ சேவையில், மாற்றுப் பாலினத்தவர் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்காலத்தில் தடை ஏற்படுத்த வழிவகை செய்யப்படும்.

அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் ஹெக்செத் இருவரும் திங்கள்கிழமை முழுவதும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் ஆனால், அவர்களது ஆலோசனை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்கும் உத்தரவு என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுதான். மேலும் டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவு பெரும்பாலும் எதிர்காலத்தில் தடை செய்ய வழிவகுக்கும்.

அதேவேளையில், இதற்கான கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைத்தான் ஹெக்செத்துக்கு டிரம்ப் எடுத்துக்கூறியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் தனது உத்தரவில், அமெரிக்கப் படைகளின் சேவை, ஒரு மரியாதைக்குரிய, உண்மையுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு, தாங்கள் பிறந்த பாலினத்தை அல்லாமல் வேறு பாலினமாக அடையாளம் காணும் நபர்களுடன் முரண்படுகிறது என்றும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட, இராணுவத் தயார்நிலைக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று தெரிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!