இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

வெள்ளை மாளிகை ஊடக செயலாளரை புகழ்ந்து பாராட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறை அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக 27 வயது இளம்பெண் கரோலின் லெவிட்டை நியமனம் செய்வதாக கடந்த நவம்பர் 15ந்தேதி அறிவித்தார்.

இதன் மூலம் இளம் வயதில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளராக பதவியேற்ற பெண் என்ற பெருமையை கரோலின் லெவிட் பெற்றார்.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய கரோலின் லெவிட், “அதிபர் டிரம்ப் தனது ஆறு மாத பதவிக்காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான பேச்சுவார்த்தை அல்லது போர்நிறுத்தத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அதிபர் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் அண்மையில் பேட்டி ஒன்றில் கரோலின் லெவிட்டின் செயல்பாடுகள் குறித்து பேசியபோது, “அவர் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார். அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன. கரோலின் லெவிட் மிகச்சிறந்த பெண்மணி. அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது” என்று புகழாரம் சூட்டினார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி