அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களின் இன விவரங்களை வெளியிட கட்டளையிட்ட டிரம்ப்
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இன விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மாணவர்களை இன அடிப்படையில் சேர்க்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கூறியது.
ஜனாதிபதியின் உத்தரவில் தெளிவான குறிப்புகள் இல்லை என்று அமெரிக்க உயர் கல்விக் கொள்கைக் குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை அரசாங்கம் விரும்பும் வகையில் சேகரிப்பது, உள்நாட்டு சட்டங்களுக்குப் புறம்பானதாக இருக்கக்கூடும் எனும் எச்சரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





