மருத்துவமனையை விட்டு வெளியேறிய ட்ரம்ப் – அடுத்த மாநாட்டிற்கு பயணம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்று பிரசாரத்தின்போது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
ட்ரம்பைத் தாக்கியவர் 20 வயது தோமஸ் மேத்தியூ குரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தச் சம்பவத்தில் திரு டிரம்ப்பின் வலது காதின் மேல் புறத்தைத் தோட்டா துளைத்துச் சென்றது. பிரசாரத்துக்கு வந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ட்ரம்ப் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள Butler Memorial மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அமெரிக்க ரகசியச் சேவை அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது.
பரிசோதனை முடிந்த சில மணி நேரத்தில் டிரம்ப் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
நியூ ஜெர்ஸியில் (New Jersey) இருக்கும் தமது இல்லத்துக்குச் சென்று அவர் ஓய்வெடுத்தார்.
தற்போது அவர் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விஸ்கோன்சின் (Wisconsin) மாநிலத்தின் மில்வாவ்கீ (Milwaukee) நகருக்குச் சென்றுள்ளார்.